வருமானத்தை அள்ளிக்கொட்டிய மின்னேரிய வனப்பூங்கா

Report Print Aasim in இயற்கை
86Shares

கடந்த ஆண்டில் மின்னேரிய வனப்பூங்கா எதிர்பாராத அளவுக்கு பாரிய வருமானத்தை ஈட்டியுள்ளதாக அதன் ஆண்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2017ம் ஆண்டில் ஒரு லட்சத்தி 63 ஆயிரத்து 557 சுற்றுலாப் பயணிகள் மின்னேரிய வனப்பூங்காவைப் பார்வையிட வருகை தந்துள்ளனர்.

இவர்களில் 83 ஆயிரத்து 961 பேர் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் என்றும் வௌிநாட்டு உல்லாசப் பிரயாணிகள் 79 ஆயிரத்து 596 பேர் வருகை தந்துள்ளதாகவும் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலமாக கடந்த ஆண்டில் மட்டும் 238.83 மில்லியன் ரூபா வருமானத்தை மின்னேரிய வனப்பூங்கா ஈட்டிக் கொண்டுள்ளது.

இந்த ஆண்டு அதன் வருமானம் இன்னும் அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.