நுவரெலியாவில் வீடமைப்புத்திட்டத்துக்காக பாதுகாக்கப்பட்ட வனம் அழிப்பு

Report Print Aasim in இயற்கை

நுவரெலியா நகருக்கு அண்மையில் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படவுள்ள வீடமைப்புத் திட்டமொன்றுக்காக பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியொன்று அழிக்கப்படட்டுள்ளது.

நுவரெலியா அருகே உள்ள சீதாஎளிய பாதுகாக்கப்பட்ட வனாந்திரத்தின் எல்லைப்புறமான கட்டுமான வனாந்திரத்தின் ஒருபகுதியே இவ்வாறு அழிக்கப்பட்டுள்ளது.

வீடமைப்புத் திட்டமொன்றுக்காக குறித்த வனப்பகுதியில் சுமார் இரண்டரை ஹெக்டயார் அளவிலான காணி ஒதுக்கப்பட்டுள்ளதுடன், அதற்காக வனாந்திரப் பகுதியும் காடுகள் அழிக்கப்பட்டு சுத்திகரிக்கப்பட்டுள்ளது.

குறித்த பிரதேசம் பாதுகாக்கப்பட்ட வனாந்திரம் என்பதுடன் நீராதார பிரதேசம் என்றும் சூழல் அமைப்புகள் சுட்டிக் காட்டியுள்ளதுடன், அப்பகுதியில் வீடமைப்புத் திட்டம் மேற்கொள்ளப்படுவதை கடுமையாக எதிர்த்துள்ளன.

அத்துடன் காடுகள் அழிக்கப்பட்டு அப்பிரதேசத்தில் வீடுகள் அமைக்கப்பட்டால் அவை மண்சரிவுக்குள்ளாகும் அபாயம் இருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.