வெள்ளம் காரணமாக கம்பஹாவில் ஐயாயிரம் பேரளவில் பாதிப்பு

Report Print Aasim in இயற்கை

கடந்த இரண்டு நாட்களாக கம்பஹா பிரதேசத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக தற்போதைக்கு ஐயாயிரம் பேரளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

கம்பஹா மாவட்டத்தின் ஒன்பது பிரதேச செயலகப் பிரிவுகளில் வெள்ளப் பாதிப்பு தீவிரமாக இருக்கும் நிலையில் அங்குள்ள 1170 குடும்பங்களைச் சேர்ந்த 4824பேர் வௌ்ளத்தினால் பாதிக்கப்ப்டுள்ளனர்.

இதற்கு மேலதிகமாக கம்பஹா, அத்தனகல்லை, வத்தளை, திவுலப்பிட்டிய, தொம்பே, மினுவாங்கொடை, பியகம, மீரிகம, களனி, போன்ற பிரதேச செயலகப் பிரிவுகளில் சுமார் 23 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளன.

கம்பஹா மாவட்டத்தின் மத்தியில் ஊடறுத்து ஓடும் அத்தனகல்லை ஆறு போன்றே களனி ஆற்றின் கரையோரப் பிரதேசங்களில் வசிக்கும் மக்களும் வெள்ள அபாயத்தை கடுமையாக எதிர்கொண்டுள்ளனர்.

எனவே இந்த ஆறுகளின் ஓரமாக தாழ்நிலப் பிரதேசங்களில் வசிக்கும் மக்கள் 24 மணிநேரமும் அவதானமாக இருந்து கொள்ளுமாறு மாவட்ட அரசாங்க அதிபர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.