இலங்கையின் நீளமான நீர்வீழ்ச்சியில் ஏற்பட்ட அதிசயம்!

Report Print Vethu Vethu in இயற்கை

இலங்கையில் மிகவும் உயரமான நீர்வீழ்ச்சியில் ஏற்படும் அதிசயம் பலரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

மிக உயரமான ஹல்தும்முல்ல பம்பரகந்த நீர்வீழ்ச்சி திடீர் தீடீரென தோன்றி மறைவதாக தெரிவிக்கப்படுகின்றது.

அண்மைய நாட்களில் இலங்கையில் மாறுபட்ட காலநிலை நிலவுகிறது. குறிப்பாக மலையகம் எங்கும் அடைமழை பெய்து வருகிறது.

இந்நிலையில் அங்குள்ள அனைத்து நீர்வீழ்ச்சிகளிலும் அதிகளவு நீர் வழிந்தோடுகிறது.

நீர்வீழ்ச்சியை காண பெருந்தொகை சுற்றுலா பயணிகள் மலையக பகுதிக்கு படையெடுத்துள்ளனர்.

எனினும் தற்பொது நிலவும் பனிமூட்டம் நிறைந்த காலநிலையால் அடிக்கடி நீர்வீழ்ச்சி மறைந்து செல்கிறது, திடீரென மீண்டும் பனி மூட்டம் மறைந்து நீர்வீழ்ச்சி காட்சியளிக்க ஆரம்பித்துள்ளது.

இந்த மாற்றம் இயற்கை விரும்பி சுற்றுலா மேற்கொண்டுள்ள வெளிநாட்டவர்களை பெரிதும் கவர்ந்துள்ளது.