கிண்ணியா - மாஞ்சோலை பகுதியிலுள்ள வீட்டில் விசித்திர பப்பாசி மரமொன்று வளர்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
ஏனைய பப்பாசி மரங்களில் போன்று மரத்துடன் ஒட்டியவாறு பப்பாசி உருவாகாமல் மரத்திலிருந்து கொடி போன்ற அமைப்பு வந்து அதில் பப்பாசிகள் உருவாகியுள்ளன.
இது தொடர்பில் அப்பகுதி மக்கள் தெரிவிக்கையில், இவ்வாறானதொரு பப்பாசி மரத்தை தாம் பார்த்ததில்லை என வியப்புடன் சுட்டிக்காட்டுகின்றனர்.
அதேவேளை இந்த விசித்திர பப்பாசி மரத்திலுள்ள பழங்களை உட்கொள்ள முடியுமா என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளனர்.