யாழில் கடும் யுத்தத்திலும் கம்பீரமாய் நின்ற வாகை மரத்தை வேரோடு சாய்த்த கஜா

Report Print Shalini in இயற்கை

யாழ்ப்பாணத்தை கடந்த வாரம் தாக்கிய கஜா புயலால் 300ஆண்டுகள் பழமை வாய்ந்த வாகை மரம் அடியோடு சாய்ந்துள்ளது.

எனினும் குறித்த செய்தி இதுவரை வெளியில் வரவில்லை. மத்திய மலை நாட்டில் 200 வருடங்கள் பழமை வாய்ந்த மரம் ஒன்று விழுந்தமை அனைத்து ஊடகங்களிலும் வெளிவந்திருந்தது.

எனினும் கடும் யுத்தத்திற்கு மத்தியில், ஷெல் தாக்குதல், குண்டுத் தாக்குதல்களில் இருந்து தப்பி கம்பீரமாக நின்ற பாரிய மரத்தை ஒரு புயல் வேரோடு சாய்த்து விட்டது.

குறித்த மரம் பாதசாரிகளுக்கு இடையூறு விளைவிக்காமல் பாதையோரத்தில் வீழ்ந்துள்ளது.

மேலும், 1985களிலிருந்து குண்டுத் தாக்குதல்கள் மற்றும் ஷெல் தாக்குதல்களில் இருந்து பலரையும் காப்பாற்றிய இம்மரம் வேரோடு சாய்ந்துள்ளமை அனைவரையும் கவலையடையச் செய்துள்ளது.