அண்டார்டிக்கா பகுதியில் இன்று காலை பதிவாகியுள்ள பாரிய நிலநடுக்கம்

Report Print Sujitha Sri in இயற்கை

அண்டார்டிக்கா பகுதியில் இன்று காலை பாரிய நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக இந்திய ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

7.5 ரிக்டர் அளவுடைய நிலநடுக்கமே பதிவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அர்ஜென்டினாவின், டியரா டெல் பியூகோ மற்றும் சிலி போன்ற நாடுகளில் குறித்த நிலநடுக்கத்தின் தாக்கம் உணரப்பட்டுள்ளது.

இதனால் பலத்த சேதம் ஏற்பட்டிருப்பதாக தகவல் தெரிவிப்பதாகவும், நிலநடுக்கத்தின் மையப் பகுதியிலிருந்து சுமார் 250 கிலோமீட்டர் பகுதிவரையில் பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் எனவும் குறித்த செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Latest Offers