மாந்தை மேற்கில் படையினர் வசம் இருந்த 500 ஏக்கர் காணி விடுவிப்பு

Report Print Ashik in இயற்கை
81Shares

மன்னார் - மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் படையினர் வசம் இருந்த காணிகளில் 500 ஏக்கர் நேற்று விடுவிக்கப்பட்டுள்ளது.

இந்த தகவலை மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் எஸ்.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட 600 ஏக்கர் பரப்பளவை கொண்ட வெள்ளாங்கும் பண்ணை படையினர் வசம் இருந்தது.

இந்த நிலையில் குறித்த பண்ணையில் 500 ஏக்கர் காணி தற்போது விடுவிக்கப்பட்டுள்ளதாக மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் எஸ்.கேதீஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.