அந்தமான் - நிக்கோபார் தீவுகளில் இன்று நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்

Report Print Sujitha Sri in இயற்கை

அந்தமானில் உள்ள நிக்கோபார் தீவுகளில் இன்று அதிகாலை 4.8 ரிக்டர் அளவிளான நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

12 நிமிடங்கள் வரையில் நீடித்த இந்த நிலநடுக்கமானது 45 கிலோமீற்றர் தூரம் வரையில் உணரப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலநடுக்கத்தினால் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை எனவும், இதுவரையில் சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை எனவும் தெரியவருகிறது.

அதிகாலையில் உணரப்பட்டுள்ள இந்த நிலநடுக்கத்தால் மக்கள் பீதிக்கு உள்ளாகியுள்ளதாக இந்திய ஊடகமொன்று தெரிவித்துள்ளது.