நோர்வூட் பகுதியில் கடும் காற்றுடன் மழை! பத்து குடியிருப்புக்கள் சேதம்

Report Print Thirumal Thirumal in இயற்கை

நோர்வூட் பொலிஸ் பிரிவில் அமைந்துள்ள வெஞ்சர் தோட்டத்தில் நேற்று மாலை பெய்த கடும் காற்றுடன் கூடிய மழையால் பத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர் குடியிருப்புக்கள் சேதமடைந்துள்ளன.

வெஞ்சர் தோட்டத்தில் வீசிய கடும் காற்று காரணமாக சில வீடுகளின் கூரைகள் காற்றில் அள்ளுண்டு போயுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

தொடர்ந்து பெய்த மழை காரணமாக கூரைகள் இல்லாத வீடுகளில் காணப்பட்ட ஆவணங்கள், பாடசாலை புத்தகங்கள் என அனைத்தும் நீரில் நனைந்து சேதமடைந்துள்ளன.

இந்த நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் கூரைகளை மீண்டும் சீர் செய்து குறித்த வீடுகளிலேயே தற்போது தங்கியுள்ளதாக தெரியவருகிறது.

மேலும், மாலை வேளைகளில் இடி மற்றும் காற்றுடன் கூடிய மழை பெய்வதால் அனைவரையும் பாதுகாப்புடன் இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.