பகல் வேளையிலேயே இருளில் மூழ்கிய நாடுகள்! இலங்கை மக்களுக்கு கிடைக்காமல் போன அரிய வாய்ப்பு

Report Print Sujitha Sri in இயற்கை

2017ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதத்தின் பின்னர் நேற்றைய தினம் பல நாடுகளில் பூரண சூரிய கிரகணம் தென்பட்டிருந்தது.

எனினும் இந்த அரிய நிகழ்வினை காண்பதற்கான வாய்ப்பு இலங்கை, இந்தியா உள்ளிட்ட பல நாட்டு மக்களுக்கு கிட்டாமல் போயிருந்தது.

இந்த சூரிய கிரகணமானது நம் நாட்டு நேரப்படி இரவு 10:24 மணிக்கு நிகழ்ந்தமையே அதற்கு காரணமாகும்.

எனினும் பசுபிக் பெருங்கடல், சிலி மற்றும் ஆர்ஜென்டினா ஆகிய நாடுகளுக்கு பகல் வேளையிலேயே இந்த சூரிய கிரகணம் நிகழ்ந்தமையால் தெளிவாக தென்பட்டுள்ளது.

இதனால் தெற்கு பசிபிக் நாடுகள் சில மணி நேரங்களுக்கு இருளில் மூழ்கியிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முழுமையான சூரிய கிரகணமானது மொத்தமாக 4 நிமிடங்கள் 33 வினாடிகளுக்கு மட்டுமே நீடிக்கும் என்ற தகவல் வெளியாகியிருந்தது.

அத்துடன் சிலி நாட்டின், லா செரீனா எனும் இடத்தில் அந்த நாட்டு நேரப்படி மதியம் 3:22 மணி முதல் மாலை 5:46 மணிவரை கிரகணம் தென்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இவ்வாறான நிலையில் சிலி நாட்டிலிருந்து சூரிய கிரகணமானது நேரடி ஒளிபரப்பும் செய்யப்பட்டுள்ளது. இதோ காணொளி...