பெருமளவு மரங்கள் எரிந்து நாசம்! அழகிய எல்ல பகுதிக்கு ஏற்பட்ட நிலை

Report Print Ajith Ajith in இயற்கை

எல்ல வனப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீ சில பிராந்தியங்களில் தொடர்ந்து பரவி வருவதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

பதுளை மாவட்ட உதவி இயக்குநர் ஈ.எம்.எல் உதயகுமார இலங்கை விமானப்படை தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கான முயற்சிகளுக்கு உதவுவதாக தெரிவித்துள்ளார்.

எல்ல வனப்பகுதியில் நேற்று மாலை திடீர் தீ விபத்து ஏற்பட்டது. எல்ல பொலிஸ், டி.எம்.சி, வனவிலங்கு துறை அதிகாரிகள் மற்றும் அப்பகுதி மக்கள் தீயைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.

இத்தீவிபத்தினால் சுமார் 20 ஏக்கர் நிலப்பரப்பு தீ விபத்தால் அழிக்கப்பட்டது. எனினும், தற்போது அப்பகுதியில் கடுமையான காற்று வீசுவதன் மூலம் தீ தொடர்ந்து பரவி வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்த காட்டுதீ காரணமாக சுற்றுச்சூழலில் குறுகிய கால மற்றும் நீண்டகால தாக்கங்களை ஏற்படுத்தும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலரும் வழக்கறிஞருமான ஜகத் குணவர்தன தெரிவித்துள்ளார்.