அவசரமாக விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை

Report Print Tamilini in இயற்கை

இலங்கையில் தொடர்ந்து மழை பெய்துவரும் நிலையில், வடக்கு, கிழக்கு, மேல், தென் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் இன்று (24) 100 மில்லிமீற்றர் வரை பலத்த மழைவீழ்ச்சி பதிவாகும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

இதன்போது, காற்றின் வேகம் அதிகரித்து காணப்படும் எனவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.

எனவே, இது தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறு பொதுமக்களை திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

இதனிடையே, 4 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.

இரத்தினபுரி, கேகாலை, பதுளை மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களுக்கே இந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த மாவட்டங்களுக்கான மண்சரிவு அபாய எச்சரிக்கையானது இன்று மாலை 4 மணி வரை அமுலில் இருக்கும் என தேசிய கட்டட ஆய்வு நிறுவகத்தின் மண்சரிவு ஆய்வுப்பிரிவின் சிரேஷ்ட புவிசரிதவியலாளர் வசந்த சேனாதீர தெரிவித்துள்ளார்.