அண்டார்டிகாவில் உள்ள உலகின் மிக பெரிய பனிப்பாறை உடையப்போகிறதா?

Report Print Sujitha Sri in இயற்கை

ஏ - 68 என்று பெயரிடப்பட்டுள்ள உலகின் மிக பெரிய பனிப்பாறையின் அளவு சற்று சிறிதாகி உள்ளது.

அண்டார்டிகாவில் 2017ஆம் ஆண்டு முதல் தனியே உடைந்து மிதந்து வரும் இந்த பனிப்பாறையின் மொத்த பரப்பளவு சுமார் 5,100 சதுர கிலோமீட்டர் என்று கணிக்கப்படுகிறது.

தற்போது இந்த பனிப்பாறை 175 சதுர கிலோமீட்டர் அளவு குறைந்துள்ளது தெரியவந்துள்ளது.

அண்டார்டிக் தீபகற்பத்தில் இருந்து தற்போது வடக்கு நோக்கி, வெப்பநிலை அதிகம் இருக்கும் நீர் பகுதிக்கு இந்த பனிப்பாறை நகர்ந்து செல்கிறது.

கடலின் சீற்றத்தால் தெற்கு அட்லாண்டிக் பகுதிக்கு இது இழுத்த செல்லப்படும் என்று தெரிகிறது.

உலகின் மிகப்பெரிய பனிப்பாறையின் அழிவு தொடங்கிவிட்டதாக ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் செனிடெல் 1 செயற்கைக்கோள் மூலம் இந்த பனிப்பாறையின் புகைப்படம் கிடைத்துள்ளது. அதில்தான் இதன் அளவு குறைந்ததும் தெரியவந்துள்ளது.

''மிக விரைவில் இந்த பனிப்பாறை துண்டு துண்டாக உடையும் என்று தோன்றுகிறது. ஆனால் அந்த துண்டுகள் உருகாமல், பல ஆண்டுகள் தண்ணீரில் மிதக்கும்'' என்கிறார் சுவான்சி பல்கலைக்கழகத்தின் ஆராச்சியாளர் பேராசியர் ஆட்ரியன் லக்மேன்.

- BBC - Tamil