மலையகத்தின் நீர் வீழ்ச்சிகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்

Report Print Steephen Steephen in இயற்கை

மலையகத்தின் மேல் கொத்மலை நீர்த் தேக்கம் அமைந்துள்ள நீரேந்தும் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக சென் கிளேயார் மற்றும் டேவோன் நீர் வீழ்ச்சிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

கடந்த காலங்களில் நிலவிய வறட்சி காரணமாக இந்த இரண்டு நீர் வீழ்ச்சிகளிலும் தண்ணீர் குறைவாக வழிந்தோடியதுடன் அவற்றின் அழகு சற்று குறைந்து காணப்பட்டது.

மேல் கொத்மலை நீர்த் தேக்கத்தின் வான் கதலுவுகள் திறக்கப்பட்டுள்ளமை மற்றும் பெய்து வரும் கனமழைக் காரணமாக சென் கிளேயார் மற்றும் டேவோன் நீர் வீழ்ச்சிகளின் அழகுமயம் அதிகரித்துள்ளது.