விசித்திரமான சிற்பங்களை தோற்றுவித்துள்ள பனித்திருவிழா

Report Print Gokulan Gokulan in ஏனைய நாடுகள்
98Shares

சீனாவின் ஹார்பின் நகரில் பனிச் சிற்பங்கள் திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்நிலையில் தனித்துவமிக்க பனி சிற்பங்கள் கலைஞர்களால் உருவாக்கப்பட்டு கொண்டிருக்கின்றன.

உலகின் புகழ் பெற்ற கட்டடங்கள், மாளிகைகள், விலங்குகள், கோட்டைகள், உலகப் புகழ்பெற்ற சின்னங்கள், கேலிசித்திர கதாபாத்திரங்கள் என விதவிதமான சிற்பங்களும், கட்டிடங்களும் பார்வையாளரை பிரமிப்பூட்டும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன.

ஹார்பின் நகரில் சுமார் 500 சிற்ப கலைஞர்களின் உழைப்பில் இந்தப் பனிச் சிற்பங்கள் உருவாக்கப்பட்டு கொண்டிருக்கின்றன.

இவ் பனிச் சிற்பத் திருவிழா, மார்ச் மாதம் வரை நடைபெறும். மேலும் பல்வேறு நாடுகளிலிருந்து பனிச் சிற்பங்களைப் பார்வையிடுவதற்காக சுமார் 1.5 கோடி பேர் வரை வரவுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments