எத்தியோப்பியாவின் வனப் பகுதி ஒன்றில் ஆயிரக்கணக்கான சதுர கிலோ மீற்றர் பரப்பளவை எறும்பு வகை ஒன்று ஆக்கிரமித்துள்ளது.
இந்த எறும்புகளை பேய் எறும்புகள் என பெயரிட்டுள்ளதாக அறிவியல் இணையத்தளம் ஒன்று தெரிவித்துள்ளது.
ராணி எறும்பு ஒன்றின் தலைமையிலான இந்த எறும்புக் கூட்டம் துரிதமாக பெருகி மேலும் பிரதேசங்களை ஆக்கிரமிக்கும் வகையில் பரவி வருவதாக கூறப்படுகிறது.
இந்த எறும்புகள் தமது பிரதேசத்திற்குள் வரும் பெரிய விலங்காக இருந்தாலும் அதனை செயலிழக்க செய்து தமது உணவு தேவையை பூர்த்தி செய்து கொள்கின்றன. இது பூமிக்கு பாரதூரமான அச்சுறுத்தல் என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
இப்படியான நில ஆக்கிரமிப்பு செய்யும் எறும்பு வகை ஒன்று ஏற்கனவே மெக்சிகோ நாட்டில் அடையாளம் காணப்பட்டது.
இந்த எறும்புகள் மெக்சிகோவில் 6 ஆயிரம் கிலோ மீற்றர் பிரதேசத்தை ஆக்கிரமித்திருந்ததாக கூறப்பட்டது.
எது எப்படி இருந்த போதிலும் எத்தியோப்பியாவில் பரவியுள்ள இந்த பேய் எறும்புகள் உலகம் முழுவதும் வியாபித்துச் செல்லும் ஆபத்து இருப்பதாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
நாடுகளுக்கு விஜயம் செய்யும் சுற்றுலாப் பயணிகளின் பயண பொதிகள் வழியாக இந்த எறும்புகள் உலகம் முழுவதும் பரவக் கூடும் என அவர்கள் எச்சரித்துள்ளனர்.
அத்துடன் உலகின் அடுத்த அச்சுறுத்தலாக இந்த ஆக்கிரமிப்பு எறும்புகளாக இருக்கும் கூறப்படும் எதிர்வுகூறலை மனித இனம் புறந்தள்ளி விட முடியாது.