வெளிநாடொன்றில் இலங்கையர்களின் மோசமான செயற்பாடு! பொலிஸாரின் திடீர் நடவடிக்கை

Report Print Vethu Vethu in ஏனைய நாடுகள்

இத்தாலியில் சட்டவிரோதமான முறையில் இலங்கையர்களினால் நடத்திச் செல்லப்பட்ட சூதாட்ட விடுதி சீல் வைக்கப்பட்டுள்ளது.

இத்தாலியின் சிசிலி தீவில், மெச்சினா நகரத்தில் அமைந்துள்ள வீடொன்றில் சூதாட்ட விடுதி நடத்திச் செல்லப்பட்டுள்ளது.

இத்தாலிய பொலிஸார் மேற்கொண்ட திடீர் சுற்றி வளைப்பின் போது 11 இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சூதாட்டத்தில் ஈடுபட்டவர்கள் பணம் மற்றும் சூதாட்ட அட்டைகளை மறைக்க முயற்சித்த போதிலும், பொலிஸார் அதனை கைப்பற்றியுள்ளனர்.

சூதாட்ட விடுதியை சுற்றி வளைத்த சந்தர்ப்பத்தில் 4500 யூரோ பணம் மற்றும் சூதாட்ட அட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இதற்கு தொடர்புடைய வீடு சூதாட்ட விடுதியாக பயன்படுத்தியமையினால் குறித்த வீடு மற்றும் சொத்துக்கள் சீல் வைக்கப்பட்டுள்ளன.

இதேவேளை இந்த சட்டவிரோத செயற்பாட்டுடன் தொடர்புடைய ஏனையவர்களை கைது செய்ய இத்தாலிய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.