2018 புத்தாண்டு தினத்தில் புறப்பட்ட ஹவாயியன் விமானம், 2017ஆம் ஆண்டு தரை இறங்கியமை அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
உலகிலேயே நியூசிலாந்து நாட்டில் தான் புத்தாண்டு முதலில் பிறந்துள்ளது.
புத்தாண்டு பிறந்தவுடன், அங்குள்ள ஆக்லாந்து நகரில் இருந்து ஹவாயியன் எயார்லைன் 446 என்ற விமானம் கிளம்பியது.
அங்கிருந்து அமெரிக்காவின் ஹவாய் தீவில் உள்ள ஹோனோலுலு நகரில் 2017 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் திகதி 10.15 மணிக்குத் தரையிறங்கியுள்ளது.
முன்னதாக டிசம்பர் 31 ஆம் திகதி 11.55 மணிக்கு விமானம் ஆக்லாந்தில் இருந்து கிளம்புவதாக இருந்தது. ஆனால் 10 நிமிட தாமதம் காரணமாக புத்தாண்டு பிறந்தவுடன் 12.05 மணிக்குக் கிளம்பியுள்ளது.
இதனால்தான், டிசம்பர் 31 ஆம் திகதி இரவு 10.15 மணிக்கு விமானம் தரையிறங்கியுள்ளது.
இதேவேளை, உலகில் உள்ள கண்டங்களுக்கு இடையேயான நேர வேறுபாட்டால் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.