தென்னாப்பிரிக்காவில் ஒலித்த தமிழ் குரல்! மகிழ்ச்சியில் தமிழர்கள்

Report Print Nivetha in ஏனைய நாடுகள்

தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கர்நாடகாவைச் சேர்ந்த ராகுலுடன் முரளி விஜய் தமிழில் உரையாடியுள்ளார்.

செஞ்சூரியன் நகரில் நடைபெற்று வரும் 2ஆவது டெஸ்ட் போட்டியில், முரளி விஜய்யும், ராகுலும் தொடக்க வீரர்களாகக் களம் இறங்கியுள்ளனர்.

இதன்போது, ராகுலை எச்சரிக்கும் வகையில், `மச்சான் இந்த ஓவர் முழுக்க பந்தை உள்ளேதான் போடுறாங்க' என்று தமிழில் கூறியுள்ளார்.

பொதுவாக மைதானங்களில் வீரர்கள் ஆங்கிலத்தில் உரையாடுவதே வழக்கம். இவ்வாறு விளையாட்டு வீரர்கள் தமிழில் உரையாடிய சம்பவம் தமிழ் மக்களை இன்ப அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

இதேவேளை, உலக தமிழ் மக்களுக்கு பொங்கல் பண்டிகையையொட்டி, பிரித்தானியா, நோர்வே, கனடா நாட்டு பிரதமர்கள் தமிழில் பொங்கல் வாழ்த்து கூறி ஆச்சரியப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும், தமிழ் மக்களுடன் கனடா நாட்டு பிரதமர் பொங்கல் விழா கொண்டாடியுள்ள புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

தற்போது, தமிழ் மீதும், தமிழர்களின் கலாச்சாரத்தின் மீதும் உலக நாடுகளின் கவனம் திரும்பியுள்ளமை தமிழர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Latest Offers