நடுவானில் வெடித்து சிதறிய விமானம் : அனைத்து பயணிகளும் பரிதாபமாக பலி

Report Print Nivetha in ஏனைய நாடுகள்

ரஷ்யாவின் தலைநகர் மொஸ்கோ வான்பரப்பில் பயணிகள் விமானமொன்று வெடித்துச் சிதறியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மொஸ்கோ அருகே உள்ள டொமோடிடோவா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட ஏ. என்-148 என்ற சாராடோவ் நிறுவனத்தின் பயணிகள் விமானம் 71 பேருடன் நடுவானில் நொறுங்கி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதில், பயணித்த 71 பேரும் உயிரிழந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், இதில் பயணம் செய்த 71 பேரில் 65 பேர் பயணிகள் என்பதுடன் ஏனைய 6 பேர் விமான ஊழியர்கள் என்றும் தெரியவந்துள்ளது.

இதேவேளை, விபத்து குறித்து பொலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.