இலங்கை புகலிடக் கோரிக்கையாளர்கள் தொடர்பில் வெளிநாடு ஒன்றின் அதிரடி முடிவு

Report Print Vethu Vethu in ஏனைய நாடுகள்

இலங்கை தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்களுக்கான கதவுகளை மூட நியூலாந்து தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கை தமிழர்கள் 131 பேர் மலேசியாவில் சிக்கிய பின்னர் மேற்கொண்ட விசாரணைகளில் குறித்த மக்களை நியூசிலாந்திற்கு கொண்டு செல்வதற்கு ஆட்கடத்தல்காரர்கள் திட்டமிட்டுள்ளனர்.

இந்த நபர்களிடம் இலங்கை கடவுச்சீட்டு மற்றும் 43 ஐக்கிய நாடுகளின் அகதிகள் அடையாள அட்டையும் கிடைத்துள்ளது.

புகலிட கோரிக்கையாளர்கள் நாட்டுக்குள் வருவதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என நியூசிலாந்து பிரதமர் தெரிவித்துள்ளார்.

நியூசிலாந்திற்கு அகதிகளை அழைத்து செல்லும் ஆட்கடத்தல் மோசடி தொடர்பில் 60 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.