வெளிநாட்டில் மிகவும் அபூர்வமான வைரம்! சினிமா பாணியில் கொள்ளையடித்த இலங்கை இளைஞன்

Report Print Vethu Vethu in ஏனைய நாடுகள்

மத்திய கிழக்கு நாடொன்றில் மிகவும் பெறுமதி வாய்ந்த வைர கல்லை திருடிய இலங்கையர்களுக்கு 5 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

டுபாயில் உள்ள நிறுவனம் ஒன்றில் அபூர்வமான வைர கல்லை திருடியவர்களுக்கே சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இதன் பெறுமதி 73 மில்லியன் டினார் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வைரக் கல்லை, டுபாய் பொலிஸார் இலங்கையிலிருந்து மீட்டுள்ளனர். மிகவும் அரிய வகையிலான நீல வைரக் கல் ஒன்று இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கு கப்பல் ஊடாக பாதனி ஒன்றை அனுப்பி வைப்பதனை போன்று வைரக் கல் அந்தப் பாதணி பெட்டியில் மறைத்து வைத்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்திற்கு தொடர்புடைய இரண்டு இலங்கையர்களுக்கும் நேற்றைய தினம், டுபாய் குற்றவியல் நீதிமன்றத்தினால் 5 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய மற்றுமொறு 38 வயதான இலங்கையருக்கு 3 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதுடன், அவர் பாதுகாப்பு பிரிவினரில் பொறுப்பில் வைக்கப்பட்டுள்ளார்.

மிகவும் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த வைரக் கல் மிகவும் நுட்பமான முறையில் திருடப்பட்டுள்ளது.

அமீரகத்தில் பாதுகாப்பு உத்தியோகத்தராக கடமையாற்றி வந்த இலங்கையைச் சேர்ந்த நபர் ஒருவரே இந்த வைரக் கல்லை மிகவும் நுட்பமான முறையில் திருடியுள்ளார். பின்னர் அதனை அவர் இலங்கைக்கு, அனுப்பி வைத்துள்ளார். அதற்கமைய சம்பவத்திற்கு தொடர்புபட்டவர்களையும் பொலிஸார் கைது செய்தனர்.

இந்த வைரக் கல் திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் பல ஆயிரம் பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அதன் பின்னர் 8620 மணித்தியாலங்கள் சீ.சீ.ரீ.வி கமராக் காட்சிகள் கண்காணிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய சந்தேக நபர்களை கைது செய்து விசாரணை முன்னெடுக்கப்பட்ட நிலையில் நேற்றைய தினம் அவர்கள் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் 5 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Latest Offers