வெளிநாடொன்றில் இலங்கை இராணுவத்தை இலக்கு வைத்து குண்டுத்தாக்குதல்

Report Print Vethu Vethu in ஏனைய நாடுகள்

மாலி நாட்டில் ஐநா அமைதிப் படை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள இலங்கை இராணுவ வீரர்கள் இருவர்கள் உயிரிழந்துள்ளனர். பலர் படுகாயம் அடைந்துள்ளனர்.

ஐநா அமைதிப் படை நடவடிக்கைக்காக சென்ற இலங்கை இராணுவ வாகன பேரணியை இலக்கு வைத்து இன்று மேற்கொள்ளப்பட்ட குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலில் இலங்கையை சேர்ந்த இராணுவ கெப்டன் மற்றும் சிப்பாய் ஒருவரும் உயிரிரிழந்துள்ளதாக இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதலில் மேலும் 3 இராணுவ வீரர்கள் காயமடைந்துள்ளனர்.

தற்போது கிடைத்துள்ள தகவல்களுககமைய இலங்கை அமைதிப் படையினரை இலக்கு வைத்து தூரத்தில் இருந்து கட்டுப்படுத்தும் கருவி ஒன்றை பயன்படுத்தி இந்த வெடி குண்டு வெடிக்க செய்யப்பட்டுள்ளது.

குண்டுத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

Latest Offers