வெளிநாடு ஒன்றில் பரோட்டாவினால் ஏற்பட்ட விபரீதம்! கொடூர தாக்குதல் நடத்திய தமிழர்கள்

Report Print Vethu Vethu in ஏனைய நாடுகள்
1048Shares

சிங்கப்பூரில் இலவசமாக பரோட்டா வழங்காத உணவக ஊழியரை கடுமையாக தாக்கிய தமிழ் இளைஞர்களுக்கு 10 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

45 வயதான முருகன் ஜோசப் என்பவர் உணவகத்தில் இருந்த கத்தியால் அவரை தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தாக்குதல் தொடர்பான வழக்கு விசாரணை நேற்று நடைபெற்றது. இதன்போது முருகனுக்கு 10 மாத சிறைத்தண்டனையுடன் 3000 சிங்கப்பூர் டொலர்களை அபராதமாக செலுத்துமாறு சிங்கப்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முருகன் மற்றும் அவரது நண்பர்களாக பாலசந்திரன் கோதண்டபானி மற்றும் பரிசல் ரஹமட் என்பவர்கள் தினமும் சிங்கப்பூரில் உள்ள உணவகத்தில் இலவசமாக உணவு கோரி வந்துள்ளனர்.

இந்நிலையில் சம்பவம் இடம்பெற்ற தினமான கடந்த வருடம் ஜுலை மாதம் 29ஆம் திகதி முருகன் பாலசந்திரன் தனது நண்பர்களுடன் குடிபோதையில் உணவகத்திற்கு சென்று இலவசமாக பரோட்டா வழங்குமாறு கோரியுள்ளனர்.

எனினும் உணவக உரிமையாளர் இலவசமாக அதனை வழங்க முடியாதென கூறியுள்ளார். இதன்போது குறித்த தமிழர்கள் மோதலில் ஈடுபட்டதுடன் அங்கிருந்து சென்றுள்ளனர்.

மீண்டும் 10 நிமிடங்களின் பின்னர் அங்கு வந்தவர்கள் மீண்டும் உணவு வழங்குமாறு கோரியுள்ளனர். எனினும் உணவு வழங்காமையினால் நீளமான கத்தி ஒன்றை எடுத்து உணவக உரிமையாளரை தாக்கிவிட்டு அங்கிருந்து சென்றுள்ளனர்.

சம்பவத்தில் காயமடைந்தவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். சம்பவம் தொடர்பில் தமிழர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் கத்தியால் குத்திய முருகன் ஜோசப் மீது குற்றம் சுமத்தப்பட்டது.

அதற்கமைய நேற்று இடம்பெற்ற வழக்கு விசாரணையின் போது முருகன் ஜோசப் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.