வெளிநாட்டில் கொடூரமாக தாக்கப்பட்ட இலங்கை இளைஞன் - ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதி

Report Print Vethu Vethu in ஏனைய நாடுகள்

நியூசிலாந்தில் இலங்கையை சேர்ந்த இளைஞர் ஒருவர் மீது கொடூர தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தாக்குதல் மேற்கொண்ட இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குயின்ஸ்டவுண் பகுதியிலுள்ள மதுபானசாலையில் நேற்று அதிகாலை 3.20 மணியளவில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தாக்குதலுக்குள்ளான நபர் Dunedin வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் கோமா நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

24 வயதான இலங்கையர் மீதே இவ்வாறு கொடூர தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த தாக்குதல் மேற்கொண்டதன் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர்களும் 24 வயதானவர்கள் தெரிவிக்கப்படுகின்றது.

கைது செய்யப்பட்ட இருவரும் குயின்ஸ்டவுண் மாவட்ட நீதிமன்றத்தில் எதிர்வரும் திங்கட்கிழமை ஆஜர்படுத்தப்பட்வுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் வழங்கிய மக்களுக்கு பொலிஸார் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

இரண்டு இளைஞர்களின் தாக்குதல் காரணமாக குறித்த இளைஞன் ஆபத்தான நிலைக்கு சென்றதாக நேரில் பார்த்த பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

பாதிக்கப்பட்டவர் தொடர்பில் பொலிஸார் தீவிர அவதானம் செலுத்தி வருகின்றனர்.

குறித்த இலங்கையர் கடந்த பல வருடங்களாக நியூசிலாந்து குயின்ஸ்டவுண் பகுதியில் பணியாற்றி வருவதாக கண்டறியப்பட்டுள்ளது.