நியூசிலாந்தில் பாரிய சூட்டுச் சம்பவம் - பலர் ஸ்தலத்தில் பலி - சிதறி கிடக்கும் உடல்கள்

Report Print Vethu Vethu in ஏனைய நாடுகள்
1688Shares

நியூசிலாந்தில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டுச் சம்பவத்தில் பலர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

Christchurch பகுதியில் உள்ள பள்ளிவாசல் மீது இன்று அதிகாலை துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சம்பவத்திற்கான காரணத்தை இதுவரை வெளிப்படுத்தாத பொலிஸார் Christchurch பகுதியில் இருந்து பொது மக்களை வெளியேற்ற உடனடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

கறுப்பு நிற ஆடை அணிந்த நபர் Christchurch பகுதியில் உள்ள Masjid Al Noor பள்ளிவாசலுக்குள் நுழைந்தார் என சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் தெரிவித்துள்ளார்.

அங்கு நுழைந்தவர் சரமாரியாக துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட சத்தம் கேட்ட நிலையில் அங்கிருந்தவர்கள் அங்குமிங்குமாக ஓட ஆரம்பித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பின்னர் அந்த நபர் பள்ளிவாசலை விட்டு தப்பி வெளியேறியுள்ளார். சம்பவத்தை நேரில் பார்த்தவர் பள்ளிவாசலுக்குள் சென்று பார்த்த போது அங்கு பலர் உயிரிழந்து கிடந்ததை காண முடிந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

Christchurch பகுதியில் நடந்த இரண்டாவது மிகவும் கொடூரமான தாக்குதல் சம்பவம் இதுவென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, குறித்த பள்ளிவாசலில் பங்காதேஷ் கிரிக்கெட் வீரர்கள் காலைநேர தொழுகையில் ஈடுபட்டுள்ளனர்.

தாக்குதல் சம்பவத்தை அடுத்து அவர்கள் அங்கிருந்து பாதுகாப்பாக தப்பிச் சென்றுள்ளனர். எவருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.