வெளிநாடு ஒன்றில் ஏற்பட்ட விபத்தில் இலங்கை மாணவன் பலி

Report Print Vethu Vethu in ஏனைய நாடுகள்

ஜப்பானில் இடம்பெற்ற விபத்தில் இலங்கை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

ஜப்பானில் கல்வி கற்று வரும் இலங்கை மாணவர் ஒருவர் நேற்று காலை இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்துள்ளார்.

அவர் ஓட்டிய மோட்டார் வாகனம், கொள்கலன் வாகனத்துடன் மோதியமையினால் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

கம்பஹா - கடவத்தை பிரதேசத்தை சேர்ந்த இசுரு அபேதிர என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

அவர் ஜப்பானில் உள்ள Utsunomiya orion கல்லூரியில் கல்வி கற்று வந்த மாணவர் என தெரியவந்துள்ளது.

Latest Offers