மைத்திரிபால சிறிசேனவிற்கு சீன ஜனாதிபதி வழங்கியுள்ள உறுதி

Report Print Ajith Ajith in ஏனைய நாடுகள்

இலங்கையில் பயங்கரவாதத்தை களைவதற்கு சீனா உதவும் என சீன ஜனாதிபதி ஸீஜின் பிங் உறுதியளித்துள்ளார்.

சீனாவுக்கு சென்றுள்ள இலங்கையின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நேற்று பீஜிங்கில் வைத்து சந்தித்த போதே இந்த உறுதிமொழியை சீன ஜனாதிபதி வழங்கியுள்ளார்.

இலங்கை ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

இந்த நிலையில் இலங்கையின் பாதுகாப்பு அவசர நிலையை கருத்தில் கொண்டு ஜனாதிபதி சிறிசேனவின் கோரிக்கைக்கு அமைய, 260 மில்லியன் ரூபாவை அன்பளிப்பாக வழங்கவும் சீன ஜனாதிபதி இணங்கியுள்ளார்.

அத்துடன் இலங்கை பொலிஸாருக்கு மேலும் 150 பில்லியன் ரூபா பெறுமதியான 100 ஜீப் வாகனங்களை வழங்கவும் சீன ஜனாதிபதி உடன்பாட்டை வெளியிட்டுள்ளார்.

இவை தொடர்பான இரண்டு உடன்படிக்கைகளில் இரண்டு நாட்டு ஜனாதிபதிகளும் கையெழுத்திட்டுள்ளனர்.

இதேவேளை பொய்யான செய்திகளை கட்டுப்படுத்துவது தொடர்பில் இலங்கைக்கு தொழிநுட்பவியலாளர்கள் மற்றும் நிபுணர்களை அனுப்புவதாகவும் சீன ஜனாதிபதி உறுதியளித்ததாக இலங்கை ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.