ஈழத்தமிழர்களின் நீதிக்கும் அரசியல் உரிமைக்குமான வேட்கையுடன், ஜெனீவா நோக்கிய நீதிக்கான நடைப்பயணம் எட்டாவது நாளாக வீச்சுடன் சென்று கொண்டுள்ளது.
பிரென்சு பாராளுமன்ற முன்றலில் இருந்து தொடங்கிய இந்த நீதிக்கான நடைப்பயணம் தனது எட்டாவது நாளில் துறொய்ஸ் எனும் நகரில் கவனயீர்ப்பு கண்காட்சியும் நடத்தப்பட்டுள்ளது.
இதன்போது தமிழினப் படுகொலையின் சாட்சியங்கள் கொண்ட ஒளிப்படங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
எதிர்வரும் செம்ரெம்பர் 16ம் நாள் ஜெனீவா முன்றலில் இடம்பெற இருக்கின்ற நீதிக்கான கவனயீர்ப்பு போராட்டத்தை சென்றடையும் இந்த நீதிக்கான நடைப்பயணம் பாரிசில் இருந்து 187 கிலோ மீற்றர்களை கடந்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.