வெளிநாடு ஒன்றில் நடந்த விருந்து - யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஒருவர் உட்பட இருவர் மரணம்

Report Print Vethu Vethu in ஏனைய நாடுகள்
2960Shares

இந்தோனேஷியாவில் நடத்தப்பட்ட விருந்து ஒன்றில் எத்தனோல் விஷமாகியதால் இலங்கையர்கள் இருவர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் கண் பார்வையை இழந்துள்ளார் என கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

அந்நாட்டில் பணி புரியும் இலங்கையர்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட விருந்திலேயே இந்த விபரீதம் நடந்துள்ளது.

உயிரிழந்தவர்களில் ஒருவர் யாழ்ப்பாணத்தை சேர்ந்த 24 வயதுடைய டி ஜேம்ஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் புகைப்பட கலைஞராக பணியாற்றியதாக தெரிய வருகிறது. உயிரிழந்த மற்றைய இலங்கையர் தொடர்பான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.

உயிரிழந்தவர்கள் மற்றும் பார்வை இழந்தவர்களின் உடலில் எத்தனோல் விஷமாகியது கண்டறியப்பட்டுள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர்களின் சடலங்கள் நாட்டுக்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில், நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையில் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குறித்த ஊடகம் மேலும் தகவல் வெளியிட்டுள்ளது.