விமானம் ஒன்றுக்குள் மிக மோசமாக நடந்துக் கொண்ட இலங்கை பெண்!

Report Print Vethu Vethu in ஏனைய நாடுகள்

இஸ்ரேல் பென் குரியன் விமான நிலையத்தில் விமானம் ஒன்றில் மிக மோசமான முறையில் நடந்து கொண்ட இலங்கை பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

போலி விசா மூலம் இஸ்ரேலுக்கு சென்ற இந்த பெண்ணை நாடு கடத்துவதற்காக பொலிஸார் விமான நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர்.

இதன்போது தான் கழிப்பறைக்கு செல்ல வேண்டும் என குறித்த பெண்தெரிவித்துள்ளார். இதனால் அவரது கை விலங்கை பொலிஸார் அகற்றியுள்ளனர்.

பின்னர் கழிப்பறைக்கு சென்ற இலங்கை பெண் தனது சிறுநீரை கோப்பை ஒன்றில் கொண்டு வந்து பயணிகளிடம் காட்டியுள்ளார்.

இதனால் கைது செய்யப்பட்ட பெண் விமானத்தில் இருந்து கீழே இறக்கப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இலங்கை பெண் தொடர்பான எந்தத் தகவல்களும் இதுவரையில் வெளியாகவில்லை. இஸ்ரேலில் தங்கியிருக்கும் நோக்கில் இவ்வாறு மோசமான முறையில் இந்த பெண் செயற்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.