மத்திய கிழக்கு நாடுகளுக்கு கடத்தப்படவிருந்த பிலிப்பைன்ஸ் பெண்கள்!

Report Print Murali Murali in ஏனைய நாடுகள்

தெற்கு பிலிப்பைன்ஸ் மற்றும் மலேசியா வழியாக மத்திய கிழக்கு நாடுகளுக்கு கடத்தப்படவிருந்த 110 பிலிப்பைன்ஸ் பெண்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர்.

பிலிப்பைன்சின் Zamboanga துறைமுகம் வழியாக மலேசியாவின் Sandakan துறைமுகத்தை போலியான ஆவணங்களுடன் சென்றடைய முயன்ற 56 பெண்கள் தடுத்து நிறுத்தப்பட்டதாக பிலிப்பைன்ஸ் குடிவரவு ஆணையர் ஜைமி மோரெண்ட் கூறியுள்ளார்.

அதே போல், கடந்த பிப்ரவரி 10ம் திகதி மலேசியா செல்ல முயன்ற 37 பெண்களும் அதற்கு அடுத்த வாரத்தில் 17 பெண்களும் மீட்கப்பட்டுள்ளனர்.

பிலிப்பைன்சிலிருந்து மலேசியா சென்ற பின்னர் அவர்கள் மத்திய கிழக்கு நாடுகளில் பணிப்பெண்களாக பணியாற்ற கொண்டு செல்லப்படவிருந்ததாகக் கூறப்படுகின்றது.