சிங்கப்பூரில் மீண்டும் ஆட்சியை கைப்பற்றிய பீப்பிள் ஆக்சன் கட்சி

Report Print Dias Dias in ஏனைய நாடுகள்

தென்கிழக்கு ஆசிய நாடான சிங்கப்பூரில் நேற்று இடம்பெற்ற பாராளுமன்ற தேர்தலில் ஆளும் பீப்பிள் ஆக்சன் கட்சி 93 இடங்களில் 83 இடங்களில் வெற்றிப்பெற்று மீண்டும் ஆட்சியை கைப்பற்றியுள்ளது.

சிங்கப்பூரில் பிரதமர் லீ செய்ன் லுாங் தலைமையிலான பீப்பிள் ஆக் ஷன் கட்சியின் ஆட்சி தற்போது நடைபெற்று வருகின்றது.

இவரது ஆட்சிக் காலம் முடிய இன்னும் 10 மாதங்கள் இருக்கும் நிலையில் பிரதமர் லீ முன்னதாகவே தேர்தலை அறிவித்த நிலையில் சிங்கப்பூரில் பாராளுமன்ற தேர்தல் நேற்று நடைபெற்றுள்ளது.

இதேவேளை,கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வாக்கு சாவடிகளின் எண்ணிக்கை 880ல் இருந்து 1100 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதன்போது வாக்காளர்களுக்கு வாக்கு சாவடியில் முகக்கவசமும் கையுறைகளும் வழங்கப்பட்டு, மக்கள் தனி மனித இடைவெளியை பின்பற்றிவாறு பாதுகாப்பான முறையில் வாக்களித்துள்ளனர்.

இதன்போது ஆளும் 'பீப்பிள் ஆக் ஷன்' கட்சி மொத்தமுள்ள 93 இடங்களில், 83 இடங்களை பிடித்து மீண்டும் ஆட்சியை தக்க வைத்துக் கொண்டுள்ளது. இக்கட்சி, 61.24 சதவீத வாக்கு விகிதத்தினை பெற்றுள்ளது. இது கடந்த 2015ல் பெற்ற வாக்கு விகிதத்தை (69.9%) விட குறைவானதாகும்.

இதேவேளை, எதிர்கட்சியான 'வொர்க்கர்ஸ் பார்ட்டி' கட்சி, 10 இடங்களில் வெற்றி பெற்றுள்ளதுடன், அக்கட்சியின் பிரித்தம் சிங் பார்லி எதிர்கட்சி தலைவராக பொறுப்பேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.