ஐரோப்பிய ஒன்றியம், 8.26 பில்லியன் ரூபா பெறுமதிக்கொண்ட மூன்று மானியத்திட்டங்களை இலங்கைக்கு வழங்கவுள்ளது.
இது தொடர்பான உடன்படிக்கை இன்று ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இலங்கை அரசாங்கத்துக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்டது.
இலங்கையின் நீதித் துறை, உணவுப் பாதுகாப்பை மேம்படுத்துவது மற்றும் காலநிலை மாற்றத்தைத் தணிக்கும் முயற்சிகளை வலுப்படுத்தும் திட்டங்களுக்காகவே இந்த மானியத்தொகைகள் வழங்கப்படவுள்ளன.
இந்த மூன்று மானியங்களும் இலங்கையின் மூன்று முன்னுரிமை பகுதிகளை இலக்காகக்கொண்டு ஐரோப்பிய ஒன்றியம் அளிக்கும் உறுதியான உதவிகளாகும் என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கை தூதர் டெனிஸ் சைபி தெரிவித்துள்ளார்.
இன்றைய உடன்படிக்கையின் படி நீதித்துறைக்காக 4.16 பில்லியன் ரூபாவும், உணவு பாதுகாப்புக்காக 2.31 பில்லியன் ரூபாவும், சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக 1.79 பில்லியன் ரூபாவும் வழங்கப்படவுள்ளன.