ரியோ ஒலிம்பிக்கில் இதுவரை "மகிழ்ச்சி" தராத தமிழர்கள்

Report Print Dias Dias in ஏனைய விளையாட்டுக்கள்
587Shares

ரியோ ஒலிம்பிக்கில் பங்கேற்ற தமிழர்களுக்கு இதுவரை எந்த ஒரு பதக்கமும் கிடைக்காமல் போனது ஏமாற்றத்தைத் தருகிறது... ஒலிம்பிக் வரலாற்றிலேயே 100க்கும் அதிகமான இந்தியர்கள் முதல் முறையாக தற்போதுதான் பங்கேற்றுள்ளனர்.

மொத்தம் 15 விளையாட்டுகளில் 66 பிரிவுகளில் இந்தியர்கள் பங்கேற்கின்றனர்.

இவர்களில் 7 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். பளுதூக்கும் வீரர் சதீஷ் சிவலிங்கம், டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமல், தடகளம் கணபதி, ஆரோக்கிய ராஜீவ் என மொத்தம் 7 பேர்...

இவர்கள் அல்லாமல் ஈழத் தமிழரான துளசி தருமலிங்கம், கத்தார் நாட்டுக்காக குத்துச் சண்டை போட்டியில் பங்கேற்றார். இதில் நேற்று ஒரே நாளில் 2 தமிழர்கள் தோல்வியைத் தழுவியது ஏமாற்றத்தைத் தந்தது.

ஆண்கள் 77 கிலோ பளுத்தூக்கும் போட்டியில் தமிழக வீரர் சதீஷ் சிவலிங்கம் 4 ஆம் இடம் பிடித்து தோல்வியடைந்தார். இதேபோல் குத்துச்சண்டையில் மங்கோலிய வீரரிடம் கத்தார் அணிக்காக களமிறங்கிய ஈழத் தமிழர் துளசி தருமலிங்கமும் தோல்வியைத் தழுவினார்.

Comments