சிறுவயதில் பெல்ப்ஸுடன் படமெடுத்த சிறுவன்: ஒலிம்பிக்கில் அவருக்கே தண்ணீரில் 'தண்ணி' காட்டினான்,

Report Print Thayalan Thayalan in ஏனைய விளையாட்டுக்கள்

ரியோ ஒலிம்பிக்கின் மீது மக்கள் மத்தியில் ஒவ்வொரு நாளும் எதிர்பார்ப்பு அதிகரித்துக் கொண்டே வருகின்றது.

இந்நிலையில் ரியோ ஒலிம்பிக்கின் ஏழாவது நாளான நேற்று ஒலிம்பிக் போட்டிகளில் 22 தங்கம் வென்ற மைக்கல் பெல்ப்ஸ்க்கு சிங்கப்பூர் வீரர் ஜோசப் ஸ்கூலிங் கொடுத்த அதிர்ச்சி யாராலும் மறக்க முடியாத ஒரு நிகழ்வாக அமைந்துவிட்டது.

ஆண்களுக்கான 100 மீற்றர் பட்டர்பிளேவ் நீச்சல் இறுதிப்போட்டியில் 22 தங்கங்களை வென்ற பெல்ப்ஸை வீழ்த்தி ஸ்கூலிங் சிங்கப்பூருக்கான முதலாவது தங்கப்பதக்கத்தை பெற்றுக்கொடுத்துள்ளார்.

இந்த போட்டியில் மைக்கல் பெல்ப்ஸ், செட் வி குளோஸ், லெஷ்லோ ஆகியோர் வெள்ளிப் பதக்கத்தை பகிர்ந்துக்கொண்டனர்.

இதேவேளை மைக்கல் பெல்ப்ஸ் உடன் கடந்த 2008 ஆம் ஆண்டுஜோசப் ஸ்கூலிங் எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றது.

Comments