போட்டியின் போது தாக்குதல்: மாணவன் வைத்தியசாலையில்

Report Print Kumutha Kumutha in ஏனைய விளையாட்டுக்கள்

பாடசாலைகளுக்கிடையே இடம்பெற்று வரும் குத்துச்சண்டை போட்டிகளில் போட்டி நடுவர்ஒருவர் குத்துச்சண்டை வீரர் ஒருவரை தாக்கியுள்ளார்.

குறித்த தாக்குதலுக்கு இலக்கான மாணவன் கண்டியில்அமைந்துள்ள பிரபல பாடசாலையை சேர்ந்த உயர்தரத்தில் கல்வி பயிலும் மாணவன் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு ரோயல் கல்லூரியில் இடம்பெற்ற குறித்த போட்டியின் போது போட்டியின் நடுவராக கடமையாற்றியவர் போட்டியின் இடையில் குறித்த மாணவனுக்கு அறிவுரைகள் வழங்கியுள்ளார்.

போட்டியின் இடைவேளையின் போது குறித்த போட்டியாளர் தனது பயிற்சியாளருடன் உரையாடிக் கொண்டிருந்த போது நடுவரினால் தாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாக்குதலுக்கு இலக்கான மாணவன் காயங்களுடன் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், இதனையடுத்து குறித்த நடுவருக்கு எதிராக கறுவாத்தோட்ட பொலிஸ் நிலையத்தில் முறைபாடு செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, குறித்த நடுவருக்கு இரண்டு வருடங்களுக்கு போட்டி தடைவிதிப்பதற்கு குத்துச்சண்டை சங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers

loading...

Comments