தைத்திருநாளை முன்னிட்டு பட்டம் விடும் போட்டியில் உயரப் பறந்த பட்டம்

Report Print Thamilin Tholan in ஏனைய விளையாட்டுக்கள்
221Shares

தைப்பொங்கலை முன்னிட்டு இடம்பெறும் உடுப்பிட்டி பட்டப் போட்டி இன்று(14) வல்லை கட்டுவன் திடலில் இடம்பெற்றது.

இப்போட்டியில் பல வர்ண நிறமுடைய 96 cm க்கும் அதிகமான பிராந்துப் பட்டங்கள் பல பறக்க விடப்பட்டன.

அதில் உயரமாக பறக்க விடப்பட்ட பட்டங்களில் நடுவர்களால் தீர்ப்பளிக்கப்பட்ட முதல் மூன்று பட்டங்களில் முதலாவது பட்டத்துக்கு 7500 ரூபாய் பணப் பரிசும் இரண்டாவது பட்டத்துக்கு 5000 ரூபாய் பணப் பரிசும் மூன்றாவது பட்டத்துக்கு 3000 ரூபாய் பணப் பரிசும் வழங்கப்பட்டது.

முதலாவது பரிசினை ஜெசிதரன் பெற்றுக் கொண்டார். ஏனைய 5 போட்டியாளர்களுக்கு ஆறுதல் பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டன.

பட்டப் போட்டிகளில் வருடக் கணக்காக பங்கேற்று நன்கு அனுபவம் வாய்ந்தவரான தேவதாஸ் வெற்றி பெற்ற போட்டியாளர்களுக்கு பணப் பரிசில்களை வழங்கி வைத்தார்.

வெளிநாடு வாழ் உடுப்பிட்டி மக்களின் ஆதரவில் வருடந்தோறும் இடம்பெறும் இந்தப் பட்டப் போட்டியில் ஏராளமான சிறுவர்கள், இளைஞர்கள் மற்றும் பெரியவர்கள் பலரும் ஆர்வத்துடன் பங்குபற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

Comments