யாழ்.சென்ஜோன்ஸ் கல்லூரி, யாழ்.மத்திய கல்லூரி ஆகிய பிரபல கல்லூரிகளுக்கிடையிலான 'வடக்கின் சமர்' என வர்ணிக்கப்படும் வருடாந்தக் கிரிக்கெட் போட்டி மிக கோலாகலமாக ஆரம்பமாகவுள்ளது.
நாளை-09 ஆம் திகதி வியாழக்கிழமை, நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமைகளில் யாழ். மத்திய கல்லூரி மைதானத்தில் இடம்பெறவுள்ளதாக கல்லூரி தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, இந்த வருடப் போட்டிக்கான ஏற்பாடுகள் யாவும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதுடன், மூன்று நாட்கள் தொடர்ச்சியாக இடம்பெறவுள்ள இந்தப் போட்டிகள் தினமும் முற்பகல்-10 மணி முதல் நண்பகல்- 12 மணி வரையும், பிற்பகல்-12.40 மணி முதல் பிற்பகல்-02.40 மணி வரையும், பிற்பகல்-03 மணி முதல் பிற்பகல்-05 மணி வரையும் மூன்று கட்டங்களாக நடைபெறும்.
கடந்த காலங்களில் இடம்பெற்ற மேற்படி இரு கல்லூரிகளுக்கும் இடையில் நடைபெற்று முடிந்த கிரிக்கெட் போட்டிகளில் யாழ்.சென்ஜோன்ஸ் கல்லூரி 35 போட்டிகளிலும், யாழ்.மத்திய கல்லூரி 27 போட்டிகளிலும் வெற்றி வாகை சூடியுள்ளன.
40 போட்டிகள் சமநிலையில் நிறைவடைந்துள்ளதுடன், ஒரு போட்டி இடைநிறுத்தப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.