வவுனியா மாவட்ட கரப்பந்தாட்ட போட்டியில் கூமாங்குளம் சுப்பர் ஸ்டார் விளையாட்டு கழகம் வெற்றி

Report Print Theesan in ஏனைய விளையாட்டுக்கள்

வவுனியா மாவட்ட இளைஞர் கழகம் நடத்திய கரப்பந்தாட்டப்போட்டியில் கூமாங்குளம் சுப்பர் ஸ்டார் விளையாட்டுக் கழகம் வெற்றி பெற்றுள்ளது.

குறித்த போட்டி வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தில் இன்று(14) இடம்பெற்றிருந்தது.

இதன் போது சிறிசுமன விளையாட்டு கழகத்திற்கும் கூமாங்குளம் சுப்பர் ஸ்டார் விளையாட்டு கழகத்திற்கும் இறுதி கரப்பந்தாட்ட போட்டிகள் இடம்பெற்றன.

இப்போட்டியில் கூமாங்குளம் விளையாட்டுக்கழகம், சிறிசுமன விளையாட்டு கழகத்தினை 4 புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதோடு தேசிய ரீதியில் நடைபெறும் கரப்பந்தாட்ட போட்டிக்கும் தெரிவாகியது.

இவர்கள் கூமாங்குளம் கிராமத்திற்கு மட்டுமன்றி வவுனியா மாவட்டத்திற்கே பெருமையினை தேடித்தந்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

Latest Offers

loading...

Comments