வறுமை காரணமாக ஒலிம்பிக் பதக்கத்தை ஏலம் விடவுள்ளேன்! சுசந்திகா

Report Print Rakesh in ஏனைய விளையாட்டுக்கள்

இலங்கைக்கு ஒலிம்பிக் பதக்கம் வென்று கொடுத்த குறுந்தூர ஓட்ட வீராங்கனையான சுசந்திகா ஜயசிங்க, அந்தப் பதக்கத்தை ஏலமிட்டு விற்பனை செய்யப் போவதாக அறிவித்துள்ளார்.

நாட்டின் புகழை சர்வதேச சமூகம் வரை எடுத்துச் சென்ற தான் இன்று பிச்சைக்காரியை விட மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார் என்றும் அவர் கவலைவெளியிட்டார்.

2000ம் ஆண்டு ஆஸ்திரேலியா சிட்னி நகரில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் மகளிருக்கான 200 மீற்றர் ஓட்டப்போட்டியில் பங்கேற்ற சுசந்திகா ஜயசிங்க 3வது இடத்தைப் பிடித்து வெண்கலப் பதக்கத்தை தனதாக்கிக்கொண்டார்.

எனினும், அப்போது இரண்டாம் இடத்தைப்பிடித்து வெள்ளிப்பதக்கத்தைசுவீகரித்துக்கொண்ட அமெரிக்க வீராங்கனை ஊக்கமருந்து பாவித்தமை பின்னர் உறுதி செய்யப்பட்டதால் இரண்டாம் இடம் சுதந்திகாவுக்கு வழங்கப்பட்டு, வெள்ளிப்பதக்கமும் கையளிக்கப்பட்டது.

இந்நிலையிலேயே, 17 ஆண்டுகளுக்குப் பின்னர் அந்தப் பதக்கத்தை ஏலமிட்டுவிற்பனைசெய்யப்போவதாக சுசந்திகா ஜயசிங்க அறிவித்துள்ளார்.

தனக்கு ஏன் இவ்வாறானதொரு நிலை ஏற்பட்டுள்ளது என்பது பற்றி விவரித்த அவர்,

விளையாட்டு அமைச்சின் ஆலோசகருக்குரிய நியமனக்கடிதம் வழங்கப்பட்டு ஒருவருடம்ஆகின்ற போதிலும், இன்னும் அமைச்சில் எவ்வித பதவியும் வழங்கப்படவில்லை.

விளையாட்டுத்துறைக்கு நான் வந்து 25 வருடங்களாகின்றன. எனினும்,விளையாட்டுத்துறையை இவ்வளவு கீழ் மட்டத்துக்குக் கொண்டு வந்த அமைச்சர் ஒருவரை நான் கண்டதில்லை.

இலங்கையின் பெயரை உலகுக்கு எடுத்துச்சென்ற வீரர்கள் நாம். இருப்பினும், இன்று பிச்சைக்கார நிலைமைக்குத் தள்ளப்பட்டு விட்டோம். கேட்பாரற்ற நிலைமையில்இருக்கின்றோம்.

ஏப்ரல், மே மாதத்துக்குரிய சம்பளம் நிறுத்தப்பட்டுள்ளது. எனக்கு இரண்டு பிள்ளைகள் இருக்கின்றனர். பெற்றோரும் இருக்கின்றனர். அவர்களைக் கவனிக்க வேண்டும்.

ஆகவேதான் எனக்குள்ள பெரும் சொத்தான ஒலிம்பிக் பதக்கத்தை சந்தைப்படுத்தத் தீர்மானித்துள்ளேன்.

அதிலிருந்து பெறப்படும் நிதியை வீட்டுக்காகவும், விளையாட்டுக்காகவும் பயன்படுத்துவேன் என்றார் சுசந்திகா..

Latest Offers

loading...