உதயதாரகையின் மாபெரும் உதைப்பந்தாட்ட இறுதிப்போட்டி

Report Print Shalini in ஏனைய விளையாட்டுக்கள்

2017ஆம் ஆண்டுக்கான உதயதாரகையின் மாபெரும் உதைப்பந்தாட்ட இறுதிப்போட்டியும் பரிசளிப்பு விழாவும் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.

இவ் இறுதி சுற்றுப்போட்டியில் விண்மீன் விளையாட்டுக் கழகமும் திக்கம் இளைஞர் விளையாட்டுக் கழகமும் மோதவுள்ளது.

குறித்த நிகழ்வுகள் பருத்தித்துறையில், கற்கோவளம் உதயதாரகை விளையாட்டுக்கழக மைதானத்தில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை பி.ப 04.00 மணிக்கு நடைபெறவுள்ளது.

அமரர் கந்தசாமி ஆறுமுகம் அவர்களின் ஞாபகார்த்தமாக பருத்தித்துறை உதைப்பந்தாட்ட லீக் அனுமதியுடன் நடைபெற்றுவந்த வடமராட்சி மற்றும் பருத்தித்துறை கழகங்களுக்கு இடையிலான 07 பேர் கொண்ட உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டியே நடைபெறவுள்ளது.

இதற்கு பிரதம விருந்தினராக வடமாகாண கல்வி, கலை, பண்பாட்டு மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சர்வேஸ்வரன் கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.