கிழக்கின் சமர்: சிவானந்தா தேசிய பாடசாலை அணி வெற்றி

Report Print Kumar in ஏனைய விளையாட்டுக்கள்

கிழக்கின் சமர் எனப்படும் மட்டக்களப்பு சிவானந்தா தேசிய பாடசாலையின் அணிக்கும், அக்கரைப்பற்று இராமகிருஸ்ண மிசன் தேசிய பாடசாலை அணிக்கும் இடையிலான உதைபந்தாட்ட சிவராமா கிண்ணம் போட்டி நேற்று நடைபெற்றது.

மட்டக்களப்பு சிவானந்தா தேசிய பாடசாலையின் அதிபர் எஸ்.தயாபரன் தலைமையில் நடைபெற்ற இந்த உதைபந்தாட்டப் போட்டியில் மட்டக்களப்பு சிவானந்தா தேசிய பாடசாலை அணி வெற்றி பெற்று இந்த ஆண்டுக்கான சாம்பியனாக தெரிவு செய்யப்பட்டது.

போட்டியினை தொடர்ந்து பரிசளிப்பு நிகழ்வு நடைபெற்றதுடன், இரண்டு பாடசாலைகளுக்கும் இலங்கை உதைபந்தாட்ட சங்கத்தினால் உதைபந்துகளும் அன்பளிப்பு செய்யப்பட்டன.

இதன் ஆரம்ப நிகழ்வில் இலங்கை உதைபந்தாட்ட சங்கத்தின் தலைவர் அனுர டி சில்வா பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

இதேவேளை, சிறப்பு அதிதிகளாக மட்டக்களப்பு உதைபந்தாட்ட சங்கத்தின் தலைவர் எம்.உதயகுமார், இலங்கை உதைபந்தாட்ட சங்கத்தின் உபதலைவர் என்.ரி.பாறூக் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

Latest Offers