வெற்றியை தட்டிப்பறித்தது மன்னார் அணி

Report Print Theesan in ஏனைய விளையாட்டுக்கள்

வவுனியா மற்றும் மன்னார் கிரிக்கெட் அணிகளுக்கிடையில் இன்றைய தினம் இடம்பெற்ற வன்னி பிரதி பொலிஸ் மா அதிபர் காரியாலயத்தின் தேசபந்து தென்னக்கோன் வெற்றிக் கிண்ண மென்பந்து இறுதிச் சுற்றுப்போட்டியில் மன்னார் அணி வெற்றியீட்டிக் கொண்டுள்ளது.

வன்னி பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் தலைமையில், வவுனியா நகர சபை மைதானத்தில் குறித்த மென்பந்து இறுதிச் சுற்றுப் போட்டி இடம்பெற்றது.

வவுனியா மற்றும் மன்னாரில் பொலிஸாரால் கடந்த ஒரு மாத காலமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நடமாடும் சேவையை முன்னிட்டு குறித்த போட்டி இடம்பெற்றது.

மன்னார் சென் அன்ரனீஸ் மற்றும் வவுனியா பூந்தோட்டம் அண்ணா அணிகளுக்கு இடையில் நடைபெற்ற ஐந்து ஓவர்களைக் கொண்ட இறுதிச் சுற்றுப் போட்டியில் மன்னார் சென் அன்ரனீஸ் அணி வெற்றி பெற்று முதலாவது பரிசினை தட்டிச் சென்றது.

போட்டியில் வெற்றி பெற்ற சென் அன்ரனீஸ் அணிக்கு வன்னி பிரதி பொலிஸ் மா அதிபர் தென்னக்கோன் வெற்றிக் கிண்ணத்தையும் 25 ஆயிரம் ரூபா பணப் பரிசினையும் வழங்கி வைத்தார்.

இரண்டாம் இடத்தினைப் பெற்ற அண்ணா கிரிக்கெட் அணியினருக்கு வெற்றிக் கிண்ணத்தையும் 15 ஆயிரம் ரூபா பரிசுத் தொகையினையும் வவுனியா மாவட்ட உதவிப்பொலிஸ் அத்தியட்சககர் எம்.என்.சிசிரகுமார வழங்கி வைத்தார்.

குறித்த நிகழ்வின்போது, வவுனியா தலமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டபிள்யூ.ஏ.மகிந்த, ரெலோ கட்சியின் இளைஞர் அணி தலைவர் ப.கார்த்திக், வவுனியா வர்த்தக சங்க செயலாளர் கோ.சிறிஸ்கந்தராஜா ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

அத்தோடு வவுனியா பிரதேச கலாச்சார உத்தியோகத்தர் எஸ்.பிரதீபன், ஐக்கிய அபிவிருத்தி நிதியத்தின் வடக்கு மாகாண இணைப்பாளர் ஏபிரகாம் ராகுலன் மற்றும் பொலிஸ் அதிகாரிகள் என மேலும் பலர் கலந்து கொண்டிருந்ததோடு வெற்றி பெற்ற போட்டியாளர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers

loading...