மஹிந்தவின் கோட்டையில் மீண்டும் சாதனை படைத்த யாழ். வீராங்கனை!

Report Print Vethu Vethu in ஏனைய விளையாட்டுக்கள்

தேசிய மட்டத்தில் கோல் ஊன்றி பாய்தலில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த வீராங்கனை மீண்டும் சாதனை படைத்துள்ளார்.

அவரால் முதலில் ஏற்படுத்திய சாதனையை ஜே.அனித்தா இன்று மீண்டும் புதுப்பித்துள்ளார்.

தியகம மஹிந்த ராஜபக்ச மைதானத்தில் இடம்பெற்ற 95வது தேசிய தடகள போட்டியிலேயே அவர் இந்த சாதனையை புரிந்துள்ளார்.

கடந்த வருடம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற 42வது தேசிய விளையாட்டு விழா பெண்களுக்கான கோல் ஊன்றி பாய்தல் போட்டியில் அனித்தா சாதனை படைத்தார். இந்நிலையில் இன்று மீண்டும் அவர் தனது சாதனையை முறியடித்துள்ளார்.

இன்று இடம்பெற்ற பெண்களுக்கான கோல் ஊன்றி பாய்தல் போட்டியில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த வீராங்கனைகள் முதல் மற்றும் மூன்றாமிடங்களை பெற்றுள்ளனர்.

01.ஜே.அனித்தா - யாழ்ப்பாணம் - 3.47 m

02.எஸ்.பீ.ரணசிங்க - விமானப்படை - 3.20 m

03.சீ.ஹெரினா - யாழ்ப்பாணம் - 3.00 m

இந்தப் போட்டிகள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் கோட்டையான அம்பாந்தோட்டையில் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.