கபடி போட்டியில் வெற்றிவாகை சூடியவர்களை கௌரவிக்கும் நிகழ்வு

Report Print Kumar in ஏனைய விளையாட்டுக்கள்

இலங்கை கபடி சம்மேளனத்தினால் பாடசாலை அணிகளுக்கிடையிலான தேசிய மட்ட கபடி போட்டியில் கிரான் மத்திய கல்லூரி அணியினர் தங்கப்பதக்கத்தினை வென்றுள்ளனர்.

இந்த போட்டி, 21 மற்றும் 22ஆம் திகதிகளில் எம்பிலிப்பிட்டிய பாடசாலை மைதானத்தில் இடம்பெற்றது.

போட்டி நிகழ்வில் கிரான் மத்திய கல்லூரி சார்பாக 16 வயதுப்பிரிவு ஆண்கள் அணியினர் கலந்து கொண்டிருந்தனர்.

குறித்த வயதுப் பிரிவில், 28 அணிகள் பங்கு பற்றியிருந்தனர். இவ் அணிகளுடன் போட்டியிட்டு இறுதிப் போட்டியில் கொறண தட்சிலா மகா வித்தியாலய அணியினருடன் போட்டி இடம்பெற்றது.

இதில், 38 -11 எனும் புள்ளிகள் என்ற கணக்கினில் வெற்றிவாகை சூடியுள்ளனர். இவர்களை, கௌரவிக்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றதுடன், ஏறாவூரில் இருந்து வாகன பவனியாக கிரானிற்கு அழைத்துவரப்பட்டனர்.

இதேவேளை, இந்த நிகழ்வு, கிரான் கருணா ஐக்கிய விளையாட்டுக்கழகமும், கிரான் மத்திய கல்லூரி பழையமாணவர்கள் மற்றும் பாடசாலை சமூகத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Latest Offers

loading...