இலங்கை ஒலிம்பிக் குழு தேர்வு நாளை!

Report Print Aasim in ஏனைய விளையாட்டுக்கள்

இலங்கை ஒலிம்பிக் குழு தேர்வு செய்வதற்கான வாக்கெடுப்பு நாளை கொழும்பில் நடைபெறவுள்ளது

கடந்த 2009ம் ஆண்டு இலங்கை ஒலிம்பிக் குழுவின் முறைகேடுகள் காரணமாக அதன் நிர்வாகக்குழுவுக்கு சர்வதேச ஒலிம்பிக் குழுவினால் தடைவிதிக்கப்பட்டிருந்தது. அதன் பின்னர் ஒன்பது வருடங்கள் கழித்து இந்த ஆண்டு ஒலிம்பிக் கமிட்டிக்கான நிர்வாகக் குழு தெரிவு செய்யப்படவுள்ளது.

இம்முறை தேசிய டென்னிஸ் சங்கத்தின் சுரேஷ் சுப்பிரமணியம் தலைமையில் ஒரு குழுவும், பாய்மரப் படகோட்ட சங்கத்தின் ரொஹான் பெர்னாண்டோ தலைமையில் மற்றோர் குழுவும் நிர்வாக அதிகாரத்தைக் கைப்பற்ற களத்தில் குதித்துள்ளன.

ஒலிம்பிக் குழுவை தேர்வு செய்வதற்காக 31 விளையாட்டுக்கழகங்கள் தலா ஒருவாக்கு வீதம் வாக்குரிமையைப்பெற்றுள்ளன.

16க்கு மேற்பட்ட வாக்குகளைப் பெறும் குழுவினர் நிர்வாகக் குழுவுக்கு தெரிவு செய்யப்பட்டு தேசிய ஒலிம்பிக் குழுவாக செயற்பட அனுமதிக்கப்படுவார்கள்.

இந்த தேர்தலை கண்காணிக்க சர்வதேச ஒலிம்பிக் குழுவின் பிரதிநிதியொருவரும் இலங்கை வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers