அக்கரப்பத்தனை ஹோல்புறூக் கல்லூரியின் இல்ல விளையாட்டுப்போட்டி

Report Print Thirumal Thirumal in ஏனைய விளையாட்டுக்கள்

நுவரெலியா - அக்கரப்பத்தனை ஹோல்புறூக் கல்லூரியின் வருடாந்த இல்ல விளையாட்டு போட்டி பாடசாலை முதல்வர் முத்து ஜெயராம் தலைமையில் பாடசாலை விளையாட்டு மைதானத்தில் சிறப்பாக நடைபெற்றுள்ளது.

ஒலிம்பிக் சுடர் அக்கரப்பத்தனை பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக பாடசாலையின் பழைய மாணவரான எஸ்.தனாவினால் ஏந்தியவாறு வாகன பவனியாக மைதானத்திற்கு கொண்டுவரப்பட்டு அதன் பின் ஒலிம்பிக் தீபம் ஏற்றியபின், அனைத்து போட்டிகளும் இடம்பெற்றுள்ளன.

இதில் பிரதம அதிதியாக நுவரெலியா கல்வி வலையத்தின் மேலதிக கல்வி பணிப்பாளர் மோகன்ராஜ், உதவி கல்வி பணிப்பாளர் லசந்த அபேவர்தன, கோட்டம் 03 கல்வி பணிப்பாளர் வடிவேல், அக்கரப்பத்தனை பிரதேச வைத்தியசாலை வைத்திய அதிகாரி ஜெயராஜன், அக்கரப்பத்தனை பொலிஸ் நிலைய அதிகாரி ஆனந்த சிறி மற்றும் பிரதேச பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

விளையாட்டு போட்டிகள் சபாயர், டயமன்ட், எமரல் ஆகிய 03 இல்லங்களை சேர்ந்த மாணவர்கள் போட்டியில் ஈடுப்பட்டனர். இதில் வருடத்திற்கான முதலாம் இடத்தினை சபாயர் இல்லம் தனதாக்கிக் கொண்டது.

போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கும், முதலாம், இரண்டாம், மூன்றாம் இடங்களை பெற்ற இல்லங்களுக்கும் வெற்றி கிண்ணங்களும், சான்றிதழ்களும் பிரதம அதிதிகளால் வழங்கி வைக்கப்பட்டன.

Latest Offers

loading...