பெண்கள் பளு தூக்கும் பிரிவில் இலங்கைக்கு மற்றுமொரு பதக்கம்

Report Print Murali Murali in ஏனைய விளையாட்டுக்கள்

பொதுநலவாய விளையாட்டு போட்டிகளில், தினூஷா கோமஸ் இலங்கைக்கு இரண்டாவது பதக்கத்தை பெற்றுக் கொடுத்துள்ளார்.

21வது பொதுநலவாய விளையாட்டு போட்டிகளில் இன்று (05) ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்றது.

இதில் இலங்கை சார்பில், கலந்து கொண்ட தினூஷா பெண்களுக்கான 48 கிலோ கிராம் பளு தூக்கும் பிரிவில் வெண்கல பதக்கத்தை வெற்றி கொண்டுள்ளார்.

155 கிலோ கிராம் நிறையை தூக்கி அவர் வெண்கல பதக்கத்தை பெற்றுக்கொண்டுள்ளார். 25 வயதான தினூஷா கோமஸ் பாணந்துறை பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, ண்களுக்கான 56 கிலோ கிராம் பிரிவு பளு தூக்கும் போட்டியில் பங்குபற்றிய கம்பஹா பிரதேசத்தை சேர்ந்த 29 வயதான சதுரங்க லக்மால், வெண்கல பதக்கத்தை பெற்றுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Offers

loading...